“கோவை குரல்” பற்றி …

yin-yan1.jpg

இந்திய நகரங்களில் 10 லட்சம் மக்கள் தொகை உள்ள 63 நகரங்களில் கோயம்புத்தூர் என்ற எங்கள் கோவை மாநகரமும் ஒன்றாகும்.

2005 ஆம் ஆண்டின் மத்தியில் இந்த நகரங்கள் அனைத்தயுமே அடிப்படையில் மாற்றி அமைக்கும் திட்டம் ஒன்றை நடுவன் அரசு முன் வைத்தது. 

இந்திய நகரங்களின் அடிப்படைக் கட்டமைப்புகளை மாற்றி அமைப்பதற்குத் தேவையான பணத்தை நகராட்சிகளுக்கு எப்படி வட்டிக்கு விடுவது,  திட்டங்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்குவது மூலமாக எப்படி பணத்தையும், தமக்குச் சாதகமான சூழ்நிலைகளையும் உருவாக்கிக் கொள்வது,   திட்டங்களை நடைமுறைப் படுத்தத் தேவையான பொறியியல் பணிகளையும், நிர்வாகப் பணிகளையும் ஒப்பந்ததிற்கு எடுப்பதன் மூலம் மேலும் பல கோடி டாலர்களை எவ்வாறு சம்பாரிப்பது என்ற அடிப்படையில் 1993 ஆம் ஆண்டில் இருந்து  “சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க நிறுவனம்” (USAID)பல திட்டங்களைத் தீட்டவாரம்பித்தது.

இந்தத் திட்டங்களை சீரமைப்பதற்காக புது தில்லியில் உள்ள “நகரக் கட்டமைப்புகளுக்கான தேசிய நிறுவனத்தின்” (NIUA)  உதவியை அது பெற்றுக் கொண்டது.   

இவ்வாறு தீட்டப் பட்ட  திட்டமே 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதியன்று பிரதம மந்திரி அவர்களால் அறிமுகப் படுத்தப்பட்ட ஜவகர்லால் நேரு தேசிய நகர புனரமைப்புத் திட்டமாகும்.

இப்படி அறிமுகப் படுத்தப்பபட்ட ஜவகர் திட்டதிற்காக கோவை நகரத்தை மாற்றி அமைக்கும் முயற்சியில் கோவை மாநகராட்சி 2006 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ஈடுபடத் தொடங்கியது.   

இதன் முதல் கட்டப் பணியாக “நகர வளர்ச்சிக்கான திட்டத்தைத்” தீட்ட வில்பர் ஸ்மித் அசோசியேட்ஸ் என்ற அமெரிக்கக் கம்பெனிக்கு கான்ட்ராக்ட்டை மாநகராட்சி வழங்கியது. 2006 ஜூலையில் திட்ட அறிக்கையை அந்த நிறுவனம் மாநகராட்சியிடம் சமர்ப்பித்தது; என்றாலும் கூட திட்ட அறிக்கை குறித்து 2006 டிசம்பர் மாதத்தில் இருந்துதான் மாநகராட்சி நிர்வாகம் வெளிப்படையாகப் பேசத் தொடங்கியது.    

வில்பர் ஸ்மித் நிறுவனத்தால் முன் வைக்கப் பட்ட “நகர மேம்பாட்டுத் திட்டம்” சரியானதுதானா என்பதை ஆய்வு செய்வதற்காக கோவை நகரைச் சார்ந்த பல்வேறு மக்கள் அமைப்புகள் ஒன்று கூடி 2007  ஜனவரி மாதத்தின் போது “கோவை மாநகர மக்கள் கண்கானிப்புக் குழு” என்ற கூட்டமைப்பை உருவாக்கின.

இவ்வாறு உருவாக்கப் பட்ட “மக்கள் கண்கானிப்புக் குழு”வானது நகர மேம்பாடு குறித்து பல்வேறு ஆய்வறிக்கைகளை கொண்டு வந்திருக்கிறது.  இவ்வறிக்கைகளின் நீட்டிப்பாக மாதம் இரு முறை “கோவை குரல்” என்ற பெயரில் பத்திரிக்கை ஒன்றை ஜூலை 15 ஆம் தேதியில் இருந்து கொண்டு வருவது என்றும் முடிவு செய்திருக்கிறது.

அப் பத்திரிக்கையின் இணைய பதிப்பே இது.    

  

3 பின்னூட்டங்கள்

 1. sampath said,

  ஓகஸ்ட் 6, 2007 இல் 9:50 முப

  வாழ்த்துக்கள்..பொருப்புள்ள குடி மகனாக என் பங்களிப்பு என்ன??? உதவ காத்திருக்கிரேன்..
  M M Sampath Kumar CEO
  Incado International,
  434 oppanakkara street, 2nd Floor
  Coimbatore..India ..641 001
  email. sam4740@gmail.com
  mobile phone ; +91 989 473 6388
  http://www.incadoindia.com

 2. K. Muthukumar said,

  ஓகஸ்ட் 6, 2007 இல் 3:37 பிப

  Dear Editors,

  I am happy about Our Kovai Kural. We are welcome the new born baby of our கோவை மாநகர மக்கள் கண்கானிப்புக் குழு.

  Pani Siraka VAzhthukal!!!!

  Endrum anbudan,

  K. Muthukumar
  ‘ THAMIZHOSAI’

 3. SEETHARAMAN N said,

  ஓகஸ்ட் 9, 2007 இல் 8:17 முப

  GOOD INITIATIVE. THIS PUBLICATION SHOULD BRING THE FACTS & FACTUALS OF CITY INFRASTRUCTURAL DEVELOPMENTS TO THE CITIZENS OF COIMBATORE WITHOUT ANY HINDERANCES FROM ANY POLITICAL, PERSONAL AND AUTHORITIES’ INFLUENCES. WISHING THE INITIATIVE FOR EVERY SUCCESS AND LET COIMBATORE CITIZENS VOICE THEIR RIGHTS IN A PROPER WAY.

  N.SEETHARAMAN


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: