கோவை டீ ஸ்டால்

– பிரசன்ன நந்தன்

பணம் வருது, பணம் வருது, கத்திக்கொண்டே வந்தான் கிருஷ்ணன்

 என்ரா கத்திக்கிட்டு வரகோபத்துடன் கேட்டுவிட்டுவந்து டீ சொல்லு, காலையிலுருந்து ஒண்ணும் வயித்துல போடலஎன்றான் பழனி.

 ஆமா, டீயத்தான் தெனமும் குடிக்குறோமே, இனிமே வெளிநாட்டு ரேஞ்சுல குடிக்க போறோம், அத ஒரு பயலும் நம்ப மாட்டங்குறான்“.

 சலிச்சுக்காத மாப்பிள, விசயத்த சொல்லு 

நம்ம கோயம்முத்தூரு சிங்கப்பூரு ஆவப்போவுதில்ல, நம்ம கார்ப்பரேசன் கமிசனர் நம்ம செலவுல வெளி நாடு போயிட்டு வந்து ரொம்ப வருத்தப்பட்டாராம். ஏந்தான் இந்த ஊரு இப்படி கேவலமா இருக்கின்னு. இப்போ பயங்கர சந்தோசமாம்.  துட்டுவந்து ஆவப்போவுது கோயம்முத்தூரு சிங்கப்பூரு 

இப்படி பாடாதடா, கேக்குறதுக்கு ஆளிருந்தா எரும ஏரோப்பிளென் ஓட்டுதும்பியே 

வரத்தான் போவுது, நீயல்லாம் வாயப் பொளந்து பாக்கதாம் போற 

துட்டு எங்க ஆகாசத்துலருந்தா வருது?” 

எங்கிருந்து வந்தா உனக்கென்ன? கோடிக்கணக்கா கொட்டப்போவுது, நம்மூரு சிங்கப்பூரு ஆவப்போவுது அவ்வளவுதான”

 ஏண்டா, கொடுத்தவந் திருப்பி கேக்க மாட்டானா 

டீ மாஸ்டர் காளி திரும்பிப் பார்த்தார்.ஏலேய், திருப்பித்தராம இருந்தா கோவணங்கூட மிஞ்சாதுலே. வாங்கின காச மட்டுமில்ல, வட்டிக்கணக்க பாத்தா குடிச்ச டீயக் கக்கிறுவே 

கையில் சொம்புடன் டீ வாங்க வந்த அஞ்சாங்கிளாஸ் அரை டிரவுசர் ஒரு கையால் கால்சட்டையை நழுவி விடாமல் பிடித்துக்கொண்டே கவலையுடன் கேட்டதுஅண்ணே, திருப்பி தர தெம்பிருக்கானே நம்ப காப்பரேசன் கமிசனருக்கு 

அஞ்சாங்கிளாஸ் நீயே கேக்குற, கேக்க வேண்டியவங்க கேக்கமாட்டங்குறாங்களே, வாயப்பொளந்துக்கிட்டு தனக்கெதோ பெரிசா வரப்போவுதுன்னு வேறெதையுமே பேச மாட்டக்கிறாங்களே 

யாரு பேசுனா என்ன பேசாட்டி என்ன, திருப்பிக் கொடுக்கப் போறது நீயும் நானும் தான. கமிசனர் என்ன கைக்காசயா நீட்டப் போறாரு. கடத்தேங்காய எடுத்து வழியில ஒடைக்கிறதுக்கு நோக்காடா? 

அவரு மட்டுமில்லடா மாப்பிள, ஒரு பெரிய படையே இருக்குது. தேங்கா உடைக்கவா இடமில்ல அவங்களுக்கெல்லாம்? 

அவனவன் மண்டய காப்பாத்திக்க வீட்டுக்குள்ளகூட ஹெல்மட் போட்டுக்க வேண்டியதுதான். 

தலையே சுத்துது, என்னண்ணே நடக்குது கோயம்புத்தூருல?                                                                                                                                    

(தொடரும்) 

1 பின்னூட்டம்

 1. அசுரன் said,

  ஜூலை 14, 2007 இல் 6:15 பிப

  கோவை மக்களின் குரல் குமரிவரை கேட்கிறது.
  சரி,
  கோட்டையிலிருக்கும் கோமான்களின் செவிகளை எட்டவேண்டுமே.
  இப்படியே தொடருங்கள்!.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: